தூதுவளை
தூதுவளை
இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை கொண்ட உணவு வகைகளால் உங்களுக்கு சளித் தொல்லை அதிகரிக்கும். காரம், கசப்பு, துவர்ப்புச் சுவைகளால் இந்த உபாதை மட்டுப்படும். அதற்குக் காரணம் நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்னும் மகாபூதங்களின் ஆதிக்கம் அச்சுவைகளில் இருப்பதே.
இனிப்பு, புளிப்பு, உப்பும் உடலுக்குப் போஷாக்கைத் தரும் சுவைகளாகும். காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையால் சளி குறையும். ஆனால் தேகம் மெலிந்துவிடும். உங்களுக்கு தும்மலுடன் கூடிய சளி குறைய வேண்டும். சளி பிடிக்காதிருப்பதற்கு முதலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உணவில் தூதுவளை அதிகம் சேர்க்கவும். சாப்பிடும் உணவைச் சூடாகவும், எளிதில் செரிக்கும் உணவாகவும் சாப்பிடவும். கொள்ளு, பயத்தம்பருப்பு, கொண்டைக்கடலை, சுக்கு, மிளகு, அரிசித் திப்பிலி, தனியா ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கஞ்சியைக் காலை உணவாகச் சாப்பிட்டால், கெட்டுள்ள கபத்தின் உபாதையிலிருந்து விரைவாக விடுபடலாம்.
கால் டம்ளர் (75 கிராம்) கொள்ளு, கால் டம்ளர் பயத்தம்பருப்பு, 50 கிராம் கொண்டைக் கடலை, சுக்கு, மிளகு, அரிசித்திப்பிலி, தனியா ஆகியவற்றை வகைக்கு 2 கிராம் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் விட்டு, கஞ்சி காய்ச்சி, வடிகட்டி, சூடு ஆறியதும் சிறிது தேன் கலந்து காலையில் சாப்பிட்டால் நல்லது.
Comments
Post a Comment